வெளியிடப்பட்ட நேரம்: 15:11 (14/07/2017)

கடைசி தொடர்பு:15:24 (14/07/2017)

தீபாவளி பண்டிகைக்கு எவ்வளவு மது விற்க இலக்கு? உயர் நீதிமன்றம் கேள்வி

‘தீபாவளி பண்டிகைக்கு எவ்வளவு மது விற்பனைசெய்ய இலக்கு நிர்ணயித்துள்ளீர்கள்' என்று உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

மதுக் கடைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான வழக்கு, இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அடங்கிய அமர்வின்முன் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், 'மாதம் இவ்வளவு மதுபானம் விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயம்செய்து தமிழக டாஸ்மாக் நிறுவனம் செயல்படுவது வேதனை அளிக்கிறது.

வரவுள்ள தீபாவளிப் பண்டிகையின்போது இவ்வளவு மதுபானம் விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், 'அவ்வாறு இலக்கு நிர்ணயம்செய்து விற்பனைசெய்யவில்லை' என்று பதிலளித்தார்.