Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மருத்துவ மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு அரசாணை ரத்து தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு

தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மருத்துவச் சேர்க்கையின்போது 85% இடஒதுக்கீடும், சிபிஎஸ்இ மற்றும் இதர பாடத்திட்டங்களில் படித்தவர்களுக்கு 15% இடஒதுக்கீடும் வழங்கத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணைக்கு எதிராக சிபிஎஸ்இ பள்ளியில் படித்த மாணவர்கள் தொடுத்த வழக்கில் 'தமிழக அரசு பிறப்பித்துள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு அரசாணையைச் செல்லாது' எனத் தீர்ப்பளித்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிசந்திர பாபு. 

மருத்துவ மாணவர் சேர்க்கை

இந்தத் தீர்ப்பு மருத்துவச் சேர்க்கையில் காத்திருக்கும் மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.  தமிழக அரசு அடுத்து என்ன செய்யப்போகிறது எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கிறார்கள் மாணவர்கள். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 'இந்தத் தீர்ப்பின் விவரங்கள் கிடைத்தவுடன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்' என்று தெரிவித்து இருக்கிறார். 

மருத்துவ மாணவர் சேர்க்கை

உச்ச நீதிமன்றத்தில் மருத்துவச் சேர்க்கைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மற்றொரு வழக்கில் நீதிபதி அமித் மிஸ்ரா, 'மருத்துவ சேர்க்கையை நிறுத்தி வைக்க முடியாது' என்றும், மருத்துவச் சேர்க்கை நிறுத்தி வைத்தால் மாணவர்களின் எதிர்கால படிப்பு பாதிக்கப்படும். நீட் தேர்வு குறித்து மாறுப்பட்ட கேள்வித்தாள்கள் வழங்கியது குறித்து சிபிஎஸ்இ உரிய விளக்கம் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 31-ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளார். இந்தத் தீர்ப்பின் மூலம் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நாளை முதல் ஆன்லைன் வழியாக கவுன்சலிங் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close