Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிகமாக லீவு போட்டது எந்தக் கட்சி எம்.பி-க்கள் தெரியுமா?

16 வது மக்களவையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துள்ள விடுமுறைகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் அதிகமாக விடுமுறைகளை எடுத்துள்ள எம்.பி-க்கள் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 

எம்பி

16 வது மக்களவைத் தொடங்கியது முதல் கடந்த மூன்றாண்டுகளில் 34 எம்.பி-க்களிடம் இருந்து இதுவரை 46 விடுமுறை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த 46 விண்ணப்பங்களில் அதிகபட்சமாக பா.ஜ.க-வைச் சேர்ந்த 18 எம்.பி-க்களிடமிருந்து வந்துள்ளது. அதற்கு அடுத்ததாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி-க்களிடமிருந்து 9 விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. சில எம்.பி-க்கள் தொடர்ந்து விடுமுறை எடுத்துள்ளார்கள். இந்த அனைத்து விண்ணப்பங்களிலும் எடுக்கப்பட்ட மொத்த விடுமுறை நாள்கள் 1,448. 

இந்த 46 விண்ணப்பங்களில் 26 விண்ணப்பங்கள் உடல்நலக்குறைவைக் காரணமாகச் சொல்கின்றன. 9 விண்ணப்பங்கள் தேர்தலைக் காரணமாகவும், 5 விண்ணப்பங்கள் சிறையில் இருப்பதைக் காரணமாகவும் சொல்லியிருக்கின்றன. பிஜு ஜனதா தள் கட்சியின் எம்.பி ராமசந்திரா ஷன்சதா அதிகபட்சமாக 228 நாள்கள் விடுமுறை எடுத்துள்ளார். அவருக்கு அடுத்து பா.ஜ.க எம்.பி சந்த் நாத் 140 நாள்கள் விடுமுறை எடுத்துள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close