Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாடா சன்ஸ் குழுமத்தின் புதிய தலைமை டிஜிட்டல் அதிகாரி நியமனம்!

டாடா

டாடா சன்ஸ் குழுமத்தின் புதிய தலைமை டிஜிட்டல் அதிகாரியாக ஆர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகிக்கும் ஆர்த்தி, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் புதிய பொறுப்பை ஏற்பார். 

உலகத் தொழில்நுட்பத் துறையில் கிட்டத்தட்ட 26  வருடங்கள் அனுபவம் பெற்றிருக்கும் ஆர்த்தி,  கனடா, அமெரிக்கா, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் டாடா குழுமத்தின் பல்வேறு பதவியில் பணிபுரிந்திருக்கிறார். இவரின்  நியமனம் குறித்து டாடா  சன்ஸ் குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் கூறுகையில், ”எங்கள் குழுமத்தின்  டிஜிட்டல்  தொடர்பான  திட்டங்களை நிறைவேற்றுவதில் ஆர்த்தி சுப்ரமணியன் முக்கியப் பங்கு வகிப்பார்”  என்று தெரிவித்தார்.

ஆர்த்தி சுப்ரமணியன், அமெரிக்காவிலுள்ள கான்சாஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேலாண்மை படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது புதிய பதவி குறித்து பேசுகையில், “டாடா குழுமத்தில் தொடர்ந்து பணியாற்றுவதை பெருமைக்குரிய விஷயமாக நினைக்கிறேன். தற்போது, உலக நாடுகளில் வளர்ந்துவரும் டிஜிட்டல்  பொருளாதாரத்திலுள்ள புதிய வாய்ப்புகளை, இந்த குழுமத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close