Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்ணுக்கு அரிய அறுவை சிகிச்சை: ஸ்டான்லி டாக்டர்கள் சாதனை

ரத்த குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்ட இளம் மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் வெற்றிகரமாக சிகிச்சை செய்து மருத்துவமனையின் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

காரைக்காலைச் சேர்ந்தவர் ரத்தினசாமி. இவருடைய மகள் கலைச்செல்வி (வயது42), சிறு வயதிலேயே போலியாவால் பாதிக்கப்பட்டவர். அவருக்குக் கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென இடக்கை முழங்கை மற்றும் இடபக்க முகம் ஆகியவை கடுமையாக வீங்கி போயின. இதனால் கடுமையான தலைவலியுடன் இடது கண்ணைத் திறக்க முடியாமல் அவதிபட்டு வந்தார். 

ஸ்டான்லி மருத்துவமனை 

இந்நிலையில், பல மருத்துவனைக்குச் சென்று சிகிச்சை பலன் அளிக்காததால் ஸ்டான்லி அரசு மருத்துவனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இவருக்கு ஏற்கெனவே, இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டிருந்து. இதனால், கடந்த 6 மாத காலமாக டாயாலிசிஸ் செய்து வந்தார். இப்படி ஆபத்தான நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  கலைச்செல்வியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இடதுகை, முகம் மற்றும் தலையிலிருந்து இதயத்துக்கு செல்லக்கூடிய ரத்த குழாயில் அடைப்பு இருந்தது கண்டறிந்தனர்.

இதற்கு ரத்தக்குழாயில் அடைப்பை நீக்கும் எண்டோவாஸ்குலார் (Endovascular) சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த  4-ம் தேதி அன்று, ரத்தக் குழாய் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் க.துளசி குமார், க.இளஞ்சேரலாதன், சிறுநீரகத் துறைத்தலைவர்  எம்.எட்வின் பெர்னாண்டோ, மயக்கவியல் மருத்துவர் குமுதா ஆகியோர் தலைமையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சைக்குப் பிறகு கலைச்செல்விக்கு வீக்கம் முற்றிலும் மறைந்துவிட்டது. அவரின் உடல் நிலை நன்றாக தேறி வருகிறது. ஸ்டான்லி மருத்துவமனையில் முதல் முறையாக இத்தகைய சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவர்களுக்கு மருத்துவமனையின் டீன் எஸ்.பொன்னம்பல நமச்சிவாயம் பாராட்டுகளைத் தெரிவித்துப் பேசுகையில், "இந்த சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்தால் 3 லட்சம் ரூபாய் வரை செலவாகும். ஸ்டான்லியில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close