Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓவியர் வீர சந்தானம் உடல் தகனம் நாளை நடக்கிறது!

ஓவியர் வீர சந்தனம் மறைவு

சென்னையில் நேற்று காலமான ஓவியர் வீர சந்தானத்தின் உடலடக்கம் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. முன்னதாக, அவரின் இல்லத்தில் நாளை பிற்பகல் 1 மணிக்கு இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது.

தற்போது, சென்னை, தேனாம்பேட்டை, திருவள்ளுவர் சாலையில், ஆனந்தா ஓட்டல் எதிரில், பாரதியார் தெரு, 47ஆம் இலக்கத்தில் உள்ள சந்தானத்தின் வீட்டில், அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதலாக, சென்னை மற்றும் வெளியூர்களிலிருந்து வந்து தமிழின உணர்வாளர்கள் நேரில் வந்து சந்தானத்துக்கு அஞ்சலி செலுத்திவருகிறார்கள். 

அமெரிக்காவில் வசிக்கும் அவருடைய இரண்டாவது மகள் நாளை காலை சென்னை வருகிறார். தந்தையின் உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்தியபிறகு, ஓவியர் வீர.சந்தானத்தின் இறுதி ஊர்வலமானது பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி, மயிலாப்பூர் இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. இது குறித்த தகவலை ஓவியர் விஸ்வம் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தொடர்பு எண்கள் : 9940292208, 9884079187

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement