Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொடங்கி 4 மாதமே ஆன இந்திய ஸ்டார்ட்அப்... வாங்கிக் கொண்டது கூகுள்!

கூகுளுக்குக் கைவந்த கலை என்பது மற்ற நிறுவனங்களை வளைத்துப் போடுவதுதான். கூகுள் சர்ச் எஞ்சின் தவிர அவர்களின் பெரும்பாலான மற்ற வெற்றித் தயாரிப்புகள் எல்லாமே “வாங்கியவை” தான். கூகுளின் அடுத்த பர்ச்சேஸ் ஓர் இந்திய நிறுவனம். அதுவும் ஆரம்பித்து நான்கே மாதங்கள் ஆன ஸ்டார்ட் அப். கூகுள் வாங்கும் முதல் இந்திய நிறுவனமும் இதுதான் என்கிறார்கள். பெயர்: ஹல்லி லேப்ஸ் ( Halli labs)

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் மூலம் பல பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டறியும் ஹல்லி லேப்ஸ் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்ட்அப். இதன் நிறுவனர் பங்கஜ் குப்தா, தில்லி ஐஐடி மாணவர். இந்த ஸ்டார்ட்அப் தொடங்குவதற்கு முன்பு ட்விட்டரில் சில ஆண்டுகள் வேலை செய்திருக்கிறார் குப்தா. அதன் பின் இந்தியாவுக்குத் திரும்பி, Stayzilla நிறுவனத்தில் சில காலம் வேலை செய்திருக்கிறார்.

ட்விட்டரில் who to follow அல்காரிதம் மிகவும் பிரபலமானது. நாம் யாரை ஃபாலோ செய்யலாம் என்பதை, நமது ட்விட்டர் ஆக்டிவிட்டிஸ் மூலம் கணித்து சொல்லும் முறை அது. அந்த அல்காரிதமுக்கு பின்னால் இருந்தது பங்கஜ் குப்தாவின் மூளைதானாம்.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close