Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பழைய தங்க நகையை விற்றால் கூட ஜிஎஸ்டி வரியா? அரசு விளக்கம் 

பழைய தங்க நகைகளை விற்பனை செய்தால் கூட அதற்கும் ஜிஎஸ்டி (GST) வரி கட்ட வேண்டும் என்ற செய்தியால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்து இருந்தனர். இந்த நிலையில் மத்திய அரசு இதற்கு விளக்கம் அளித்துள்ளது. 

ஜிஎஸ்டி, தங்கம், GST

தங்கத்தைப் பொறுத்தவரை இதற்கு முன் சுங்க வரி 10 சதவிகிதத்தைத் தவிர்த்து, கலால் வரி 1 சதவிகிதமும், மதிப்புக் கூட்டுவரி 1 சதவிகிதமும் தங்கத்துக்கு வரியாக விதிக்கப்பட்டது; செய்கூலிக்கு எந்த வரியும் இல்லை. ஆனால், இப்போது ஜி.எஸ்.டியில் தங்கத்துக்கு 3 சதவிகிதம் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர செய்கூலிக்கு 5 சதவிகிதம் எனப் புதியதாக வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாள்களாக பழைய தங்க நகைகளை விற்றால் கூட 3 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும் என்று செய்திகள் பரவின. 
இந்த நிலையில், "பொதுமக்கள் தங்களின் பழைய தங்க நகைகளை, நகைக்கடைக்காரரிடம் விற்பனை செய்யும் போது, நகைக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படாது. தனி மனிதர்கள் தொழில்முறை வர்த்தகமாக பழைய தங்க நகைகளை விற்பனை செய்வதில்லை. சுயதேவைக்காக மட்டுமே தங்க நகைகளை விற்பனை செய்கிறார்கள். ஆகையால், இதற்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படாது" என மத்திய வருவாய்துறை செயலாளர் விளக்கமளித்துள்ளார். 

ஆனால், ரிவர்ஸ் சார்ஜ் விதிகளின்படி, தனி நபர்களிடம் இருந்து பழைய தங்க நகைகளை வாங்கும் தங்க நகைக்கடைக்காரர்கள் ஜி.எஸ்.டி வரி 3 சதவிகிதத்தை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement