Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை பராமரிப்புப் பணிகள் தீவிரம்

கன்னியாகுமரியின் இன்னொரு அடையாளம் கடல் நடுவே பாறையில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை. அதைக் காண தினமும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகிறார்கள். அவர்கள் சுற்றுலா படகுகள் மூலம் திருவள்ளுவர் சிலையை அருகில் சென்று பார்த்து வந்தனர். திருவள்ளுவர் சிலை கடல் நடுவே இருப்பதால் உப்புக்காற்று அதன் மீது பட்டு சேதமடைகிறது. அதனால் சிலை பொலிவு இழக்கிறது. சிலை சேதமடையாமல் இருக்க மூன்றாண்டுக்கு ஒருமுறை ரசாயனக்  கலவை பூசுவது வழக்கம். இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசப்பட்டது. மீண்டும் சிலைக்கு ரசாயனக் கலவை பூச தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்தது. இதற்காக 1 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரசாயன பூச்சு பணிகளுக்கான அந்த ஒப்பந்தம் ரூ.96 லட்சத்துக்கு எடுக்கப்பட்டது.

ரசாயனக் கலவை பூசும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை முன்பு சுமார் 140 அடி உயரத்தில், 80 டன் அளவுக்கு இரும்புக் கம்பிகளைக் கொண்டு சாரம் அமைத்து பணிகள் நடந்து வருகின்றன. பொருள்கள் படகு மூலம் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இப்போது திருவள்ளுவர் சிலைக்குப் பயணிகளை ஏற்றிச் செல்லும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 17-ம் தேதி முதல்கட்டமாக இரும்புக் கம்பிகளால் திவள்ளுவர் சிலையைச் சுற்றி சாரம் அமைக்கும் பணி நடந்தது. இப்போது திருவள்ளுவர் சிலையின் 3681 இணைப்புகளை இணைக்கும் சிமென்ட் கலவை பூச்சுகள் அகற்றப்பட்டு அதில் புதிய ரசாயன முறைப்படி சிமென்ட் கலவை பூசும்பணி தொடங்கியுள்ளது. இந்தப் பணிகளை 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் செய்து வருகின்றனர். இந்தப்  பணிகள் முடிந்ததும்  திருவள்ளுவர் சிலையின் மீது காகிதக்கூழ்  ஒட்டப்பட்டு உப்புநீர் உறிஞ்சி அகற்றப்பட உள்ளது. அதன்பின் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசப்படும். வரும் அக்டோபர் மாதம் 13-ம் தேதிக்குள் இந்தப் பணிகள் நிறைவடைந்து திருவள்ளுவர் சிலை புதுப்பொலிவு பெறும். அதன் பின் பூம்புகார் படகு போக்குவரத்தில் இருந்து பயணிகள் படகு, திருவள்ளுவர் சிலைக்குச் செல்லும். தற்போது, திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி வேகமாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close