Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நடக்குமா மருத்துவ, பொறியியல் கலந்தாய்வுகள்..? கலக்கத்தில் மாணவர்கள்!

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தாமதமாகுவதால், அதையொட்டி நடைபெறும் பொறியியல், மற்றும் இதர தொழிற்படிப்புகளுக்கான கலந்தாய்வுகளும் தாமதமாகிக்கொண்டே இருக்கிறது. இதனால் மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

மருத்துவக் கலந்தாய்வு

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இதில் 6,730 பேர் முதன்மையான ரேங்கிங் பெற்றிருந்தார்கள். இவர்களில் 5,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு உள்ளது. ஆகையால், `மருத்துவக் கலந்தாய்வுக்குப் பிறகே பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும்' என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து, ஜூன் 27-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த பொறியியல் கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், வேளாண் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்த போதும், இரண்டாம் கட்டக் கலந்தாய்வு ஜூலை 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, தற்போது மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்குப்ப் பின்னர்தான் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மருத்துவக் கலந்தாய்வு நடைபெறாமல் தள்ளிப்போகும் காரணத்தினாலேயே, பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், சித்த, யுனானி என இதர படிப்புகளின் கலந்தாய்வும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இதனால், இந்தக் கல்வியாண்டில் கலந்தாய்வு எப்போது நடைபெற்று எப்போது கல்லூரியில் சேருவோம் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement