Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி வழங்கியது நீதிமன்றம்

புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்த அப்பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்திருந்தார்.

மதுரைக் கிளை உயர் நீதிமன்றம்

அம்மனுவில், ”ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிராக நெடுவாசலில் 70 கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். பின்னர்  முதல்வரையும், மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சரையும் நேரில் சந்தித்துப் போராட்டக் குழு மனு  அளித்தது. அப்போது நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என அவர்கள் உறுதியளித்தனர். மேலும்,  புதுக்கோட்டை ஆட்சியரும் நம்பிக்கை தெரிவித்திருந்தார் .

இந்நிலையில் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இதனால் போராட்டக்குழு போராட்டத்தை மீண்டும் தொடங்கியது. எங்கள் போராட்டத்தின் அமைதியாக நடத்த அனுமதி கோரி புதுக்கோட்டை எஸ்.பி, டி.எஸ்.பி, காவேரி நகர் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு மனு அளித்தோம். ஆனால் இதுவரை அனுமதி வழங்கவில்லை. எனவே நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்த அனுமதி வழங்க காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது. 

இந்த மனு நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், 'போராட்டங்கள் நடத்துவது தனி மனித உரிமை. அதை யாராலும் தடுக்க முடியாது. போராட்டத்துக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என்று கூறி, புதுக்கோட்டை தடி கொண்ட அய்யனார் திடலில் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை ஆர்பாட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார் . சின்னப்பா பூங்காவில் போராட்டம் நடத்த இட வசதி குறைவு என்பதால் தடி கொண்ட ஐய்யனார் திடலில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close