வெளியிடப்பட்ட நேரம்: 20:24 (14/07/2017)

கடைசி தொடர்பு:20:24 (14/07/2017)

தண்ணீரில் விழுந்தாலும் கவலை வேண்டாம் என்கிறது ‘ஏர்டெல் செக்யூர்’!

ஏர்டெல்

ஸ்மார்ட்போன் யூஸர்களுக்காக ஏர்டெல் நிறுவனம் ’ஏர்டெல் செக்யூர்’ என்னும் பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
கைத்தவறி கீழே விழுவதால் ஏற்படும் சேதங்கள், தண்ணீரில் மொபைல் விழுந்துவிடுவதால் ஏற்படும் சிக்கல்களுக்கு இந்தத் திட்டம் தீர்வாக அமையும் என்கிறது ஏர்டெல் நிறுவனம். சர்வீஸுக்கு மொபைலை கொடுக்க அலைய வேண்டாம். வீட்டுக்கே வந்து புக்கப் செய்து, சர்வீஸ் முடிந்ததும் மீண்டும் டெலிவரி செய்ய வழிவகை செய்திருக்கிறது ஏர்டெல். இதில் வேலிடிட்டி இரண்டு ஆண்டுகள் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

இது தொடர்பாக ஏர்டெல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சொல்லியிருக்கும் வசதிகள் இவைதாம்.

கைபேசி சேதத்துக்குப் பாதுகாப்பு 

  •  சேதங்கள் மற்றும் திரவம் சிந்துவதனால் ஏற்படும் சேதத்திற்குப் பாதுகாப்பு ; ரூ.49, 79, 99 (மொபைலைச் சார்ந்து) 
  •  புதிய போன்களுக்கும் மற்றும் 24 மாதங்கள் வரை பழைய போனுக்கும் விபத்தினால் ஏற்படும் சேதத்துக்குக் காப்பீட்டை வழங்குகிறது. 
  •  மால்வேர் மற்றும் பிற வைரஸ்களுக்கு எதிராகப் பாதுகாப்பு
  •  சேதமடையுமானால் அல்லது திரவத்தால் பாதிப்பு ஏற்படுமானால் மொபைலை வீட்டிலிருந்து பெற்று சரிசெய்து திரும்பக் கொண்டுவந்து தருவது உட்படும். 
  • எளிய 3 கிளிக் செய்முறை மற்றும் ஆவணப்பதிவு செய்முறை அவசியமில்லை. 

உங்கள் போனுக்கு எதிர்பாராதவிதமாக சேதம் அல்லது திரவத்தின் காரணமாக சேதம் ஏற்படுமானால், உங்கள் மொபைலை சரிசெய்வதற்கான செலவில் மொபைல்போனின் மதிப்பில் 60% வரை காப்பீடு கிடைக்கப்பெறும். ஒரு மாதத்துக்கு ரூ. 49 என்ற மிகக்குறைந்த கட்டணத்தில் உங்களது ஏர்டெல் செக்யுரை பேக்கை பெறுங்கள். ”

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க