வாழ்த்துச் சொன்ன கிரண்பேடி... உருகிய டி.ஐ.ஜி ரூபா..!

பெங்களூரு சிறைத்துறை பெண் டி.ஐ.ஜியான ரூபாவுக்குப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து பதிலளித்துள்ளார் ரூபா.

கர்நாடக மாநிலம், பெங்களூரு சிறைத்துறையில் பெண் டி.ஐ.ஜி-யாகப் பதவி வகித்து வருகிறார் ரூபா. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார் சசிகலா. அவருக்கு சிறைக்குள் பல நவீன வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றது என்றும் இதற்காக டி.ஜி.பி சத்யநாராயணராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும் உயரதிகாரிகளுக்கு ஆவணங்களை அனுப்பி வைத்தார் ரூபா. இந்தியாவையே அதிர வைத்த இந்த விவகாரத்துக்குக் காரணமான ரூபாவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், “ரூபா மிகவும் துணிச்சலாக ஒரு விஷயத்தை வெளியே கொண்டுவந்திருக்கிறார். இந்த நேரத்தில் அவருக்கு அதிகப்படியான ஆதரவுகள் தேவை. நீங்கள் எங்கே பணியாற்றினாலும் இதே உறுதியுடன் இருக்க வேண்டும். உங்களைப் போன்றவர்கள்தான் இந்தியாவுக்குத் தேவை. கண்டிப்பாக நீங்கள் எதிர்காலத்தில் இளைய தலைமுறைக்கு ஊக்குவிக்கும் சக்தியாக இருப்பீர்கள்” என்று பதிவிட்டிருக்கிறார். அதற்கு, “உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தங்களின் ஆதரவான வார்த்தைகள் 100 யானைகளின் பலத்தை எனக்குக் கொடுத்திருக்கின்றது” என்று பதில் அளித்திருக்கிறார் டி.ஐ.ஜி ரூபா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!