Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஒரு குப்பை கதை' படத்தை வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின்! #Orukuppaikathai

'பாகன்' படத்தை இயக்கிய அஸ்லம் தயாரிக்க, புதுமுக இயக்குநர் காளி ரங்கசாமி இயக்கும் படம் 'ஒரு குப்பைக் கதை'. 

தமிழ் சினிமாவின் முக்கிய நடன இயக்குநராக வலம் வரும் மாஸ்டர் தினேஷ், இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகிறார். படத்தின் தயாரிப்பாளர் அஸ்லம், நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினுக்குப் போட்டுக் காட்டியுள்ளார். படத்தைப் பார்த்தவர், டான்ஸ் மாஸ்டர் தினேஷின் நடிப்பைப் பாராட்டியதுடன், 'சமூகத்துக்கு இதுபோன்ற படங்கள் இப்போதைய அவசியத் தேவை' என இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரை வாழ்த்தியதோடு, 'ஒரு குப்பைக் கதை' படத்தைத் தானே வெளியிடவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். 

'ஒரு குப்பையான விஷயத்தைப் பெரிது படுத்தினால், அந்தப் பிரச்னை வாழ்க்கையின் எவ்வளவு தூரத்துக்குக் கொண்டுசென்று நிம்மதியைக் குலைக்கும்' என்பதே இப்படத்தின் ஒன்லைன். புதுமணத் தம்பதியின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்னையாக திரைக்கதை அமைத்திருக்கிறாராம், இயக்குநர் காளி ரங்கசாமி. 

நடன இயக்குநர் தினேஷ் ஜோடியாக மனீஷா யாதவ் நடிக்க, முக்கியக் கேரக்டர்களில் யோகிபாபு, ஜார்ஜ் நடித்திருக்கிறார்கள். விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்துக்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜோஸ்வா ஶ்ரீதர் இசையமைத்திருக்கிறார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement