Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இயற்கை பாதுகாப்புக்குழுவின்  மனிதச்சங்கிலி நடைபெறுமா?    

 

வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசல், கதிராமங்கலம் மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அம்மக்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் இணைந்து, இயற்கை பாதுகாப்பு குழு என்ற அமைப்பை மதுரையில் உருவாக்கியுள்ளார்கள். 


வருகிற 15-ம் தேதி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிற அதேநாளில், மதுரையிலும் மனிதச்சங்கிலி நடத்த இக்குழுவினர் மதுரை காவல்துறையிடம்  அனுமதி வேண்டி  விண்ணப்பித்துள்ளனர். இப்போராட்டம் பற்றி  துண்டுப்பிரசுரம் வழங்கிய வழக்கறிஞர் அகராதி, ஜெகன், ரங்கையான் ஆகியோரை இரண்டு நாள்களுக்கு முன்பு  காவல்துறையினர் கைது செய்தது பரபரப்பானது. உடனே பிணையில் விட்டது நீதிமன்றம். 


இந்நிலையில், அறிவித்தபடி மனிதச்சங்கிலி  மதுரையில் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது,  இக்குழுவின் செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் முரளி, ''ஜனாநாயக நாட்டில் அறவழியில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், அரசோ போராட்டம் செய்பவர்களை ஒடுக்கப் பார்க்கிறது.  மனிதச்சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி வாங்க அகராதியும் ஜெகனும் கிளம்பிக்கொண்டிருந்தபோதுதான், எந்த சம்மனும்  கொடுக்காமல் இருவரையும் போலீஸார் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இத்தகவல் கேள்விப்பட்டு சென்ற ரங்கையனையும் வழக்கில் சேர்த்தார்கள். மூவரோடு ஊரிலேயே இல்லாத மனுவேல் என்பவரையும் வழக்கில் சேர்த்தனர்.  ஜனநாயக நாட்டில் இதுபோன்ற சம்பவம் மிகவும் ஆபத்தானது. நீதிமன்றம், உடனே பிணையில் விட்டுள்ளது. இதேபோல்  சேலம் வளர்மதியை  சிறையில் அடைத்துள்ளார்கள். இப்படி மக்களுக்காக போராடக்கூடியவர்கள் மீது பொய்வழக்கு போடுவதை போலீஸ் தொடர்கிறது.  பிற மாவட்ட பிரச்னை என்று அமைதியாக இருக்க முடியாது.  அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து இப்பாதுகாப்புக்குழுவை ஏற்படுத்தியுள்ளோம். நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக மதுரையில் மனிதச்சங்கிலி நடத்த காவல்துறையிடம் அனுமதி  கேட்டுள்ளோம். தரவில்லை என்றால், உயர் நீதிமன்றத்தை நாடுவோம்..'' என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement