Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஜாமர் கருவி... உச்சநீதிமன்றம் ஆலோசனை

பள்ளி மாணவர்கள் தப்பித் தவறி ஆபாச வலைத்தளங்களைப் பார்வையிடுகிறார்கள். இதனைத் தடுப்பதற்காக பள்ளிகளில் ஜாமர் கருவியை நிறுவவேண்டும் என்று ஆலோசனை வழங்கி இருக்கிறது உச்சநீதிமன்றம். 

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் '3522 ஆபாச இணையத்தளங்களைத் தடை செய்துள்ளோம். குழந்தைகள் ஆபாசப் படங்களை பார்க்காவண்ணம் இணையத்தளங்களையும் முற்றிலும் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பள்ளியில் ஜாமர் கருவிகள் நிறுவுவதற்கு மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் (சி.பி.எஸ்.இ.) கருத்து கேட்டிருக்கிறோம். ஆனால், பள்ளிப் பேருந்துகளில் ஜாமர் கருவி பொருத்த வாய்ப்பில்லை' என்று தெரிவித்துள்ளது மத்திய அரசு. 

இரண்டு நாள்களில், குழந்தைகளை ஆபாசமாகச் சித்தரிக்கும் இணையத்தளங்கள் மீது, மத்திய அரசு மேற்கொள்ள நடவடிக்கை குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். ஆபாச இணையத்தளங்களைக் கண்காணிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையக் குற்றங்களைத் தடுக்கவும் தனித்தளத்தை தொடங்க இருக்கிறது மத்திய அரசு.

மத்திய தொலைத்தொடர்பு துறை, இந்தியாவில் உள்ள அனைத்து இணையச்சேவை நிறுவனங்களிடமும் ஆபாச இணையத்தளங்களை எந்தக்காரணம் கொண்டும் இந்தியாவில் அனுமதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறது. தொடர்ந்து ஆபாசத்தளங்களின் மீது  நடவடிக்கை எடுக்கவும், மக்களிடம் விழிப்புஉணர்வையும் ஏற்படுத்திட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி உள்ளது உச்சநீதிமன்றம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement