Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணை வெளியீடு..!

பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணை www.tnea.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஜூலை 17, 18-ம் தேதிகளில் தொழில் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

19-ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறும். 19 மற்றும் 20-ம் தேதிகளில் விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெறும்.

21-ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். 23-ம் தேதி பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கலந்தாய்வுக்கான அட்டவணையை www.tnea.ac.in என்ற இணையதளத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், மாணவர்கள் எடுத்திருக்கும் கட் ஆப் மார்க்கை குறிப்பிட்டு கலந்தாய்வுக்கான நேரத்தை குறிப்பிட்டுள்ளார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement