Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சவுதியுடன் நெருங்கும் இஸ்ரேல்; ஹஜ் பயணிகளுக்கு நேரடி விமானம்!

ஸ்ரேல் நாடு உருவாகி 70 ஆண்டுகள் ஆகியும் சவுதி அரேபியா தனிநாடாக அங்கீகரிக்கவில்லை. இரு நாடுகளுக்கிடையேயும் ராஜ்ஜிய உறவும் இல்லை. சமீப காலத்தில்தான் இரு நாடுகளுக்கும் உறவு சற்றே மேம்பட்டு வருகிறது.

இஸ்ரேல் ஹஜ் பயணிகளுக்காக தனி விமானம்

அண்மையில், அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். அதற்குப் பின், சவுதி இஸ்ரேலுடன் இணக்கத்தை அதிகரித்திருக்கிறது. பொது எதிரியான ஈரானை வீழ்த்தவும் ஐ.எஸ் இயக்கத்தின் அச்சுறுத்தலை எதிர் கொள்ளவும் இஸ்ரேல் உதவி இருந்தால் நல்லது என சவுதி கருதுகிறது. 

சவுதியின்  புதிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஈரான் நாட்டுக்கு எதிரான மனநிலை கொண்டவர். கடந்த இரு வருடங்களாக இஸ்ரேல் அதிகாரிகளுடன் பல கட்டப் பேச்சுவார்த்தையை சவுதியின் புதிய இளவரசர் நடத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது. முதல்கட்டமாக இஸ்ரேலில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் சவுதி அரேபியாவுக்கு எளிதாக ஹஜ் பயணம் மேற்கொள்ள டெல் அவிவ் நகரில் இருந்து ரியாத்துக்கு நேரடி விமானப் போக்குவரத்து தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இஸ்ரேல் பாஸ்போர்ட்டை சவுதி அரேபியா ஏற்றுக்கொள்வதில்லை. அதனால், இஸ்ரேலிய இஸ்லாமியர்கள் ஜோர்டன் நாட்டுப் பயண ஆவணங்களைப் பெற்று, பேருந்திலேயே நீண்டநாள் பயணித்து ஹஜ் யாத்திரை மேற்கொள்வார்கள். ஒரு சில இஸ்ரேலியர்களுக்கே ஜோர்டானில் இருந்து சவுதி அரேபியாவுக்கு விமானத்தில் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close