ஜியோ டேட்டாபேஸை ஹேக் செய்தவர் கைது..!

ஜியோ

ஜியோ நிறுவனத்தின் டேட்டாபேஸ் ஹேக் செய்யப்பட்டது கடந்த வாரம் அதிர்வுகளை கிளப்பியிருந்தது. ஜியோ பயனர்களின் தகவல்கள் ஒரு இணையதளத்தில் லீக் ஆகிவிட்டதாகச் சிலர் ட்வீட் செய்தனர். அந்த லிங்க்கில் இருந்த இணையதளத்தில் ஜியோ பயனர்களின் எண்களுக்கு நேராக அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் இருந்தன. யூஸர்களின் பிறந்த நாள், மொபைல் எண்கள், ஜியோ வாங்கியபோது கொடுக்கப்பட்ட மற்ற எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் ஆதார் எண் வரை  அனைத்துத் தகவல்களையும் அந்த இணையதளம் பட்டியலிட்டது. 

இது தொடர்பாக ஒருவரை மகாராஷ்டிரா போலீஸ் கைது செய்திருக்கிறது. அவரிடம் இருந்து ஹேக்கிங் தொடர்பான தகவல்கள், பென் டிரைவ், லேப்டாப் மற்றும் இன்னும் சில பொருள்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. கைது செய்யப்பட்டவரின் பெயர் இம்ரான் சிப்பா. 35 வயதாகும் இவரை ஜெய்ப்பூரில் கைது செய்திருக்கிறார்கள். ஜியோ நிறுவனத்தின் டேட்டாபேஸுக்குள் அத்துமீறி இவர் நுழைந்ததாக இவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது மகாராஷ்டிரா சைபர் செல்.

இம்ரான் சிப்பா சொந்தமாக ஒரு சர்ச் எஞ்சினை உருவாக்கும் முயற்சியில் இருந்திருக்கிறார். ஆனால், இதற்கும் ஜியோ டேட்டாபேஸ் ஹேக் நடவடிக்கைக்கும் என்ன தொடர்பு, இந்தச் சம்பவத்தில் சிப்பாவைத் தவிர மற்ற யாருக்காவது தொடர்பு உண்டா என்பதெல்லாம் விசாரணைக்குப் பிறகே தெரியும் என சொல்லியிருக்கிறது மகாராஷ்டிரா போலீஸ். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!