Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆய்வு செய்யட்டுமா? கமல்ஹாசனை மிரட்டும் அமைச்சர் வேலுமணி!

கமல்ஹாசனை மிரட்டும் தொனியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் இன்று பேட்டியளித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து, அண்மையில் நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்தார். அப்போது, செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கமல், தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்துவிட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாகப் பொதுவாகப் புகார் கூறக் கூடாது. எந்தத் துறையில் ஊழல் இருக்கிறது என்று நடிகர் கமல் குறிப்பிட்டுக் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதனிடையே, கமல்ஹாசனிடம், ஜெயக்குமாரின் பதிலைச் சுட்டிக்காட்டி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த கமல், தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக, மேலும் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கமல்ஹாசனை ஒருமையில் பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கமல்ஹாசனை மிரட்டும் தொனியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டியளித்துள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் இருந்தால் கமல்ஹாசன் நிரூபித்துக்காட்ட வேண்டும். ஊழல் மலிந்துவிட்டதாகக் கூறுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். கமல்ஹாசன் தன்னுடைய படங்களுக்கு முறையாக வரி செலுத்தியுள்ளாரா என்பதை ஆய்வு செய்யட்டுமா. திரைத்துறைக்காகப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறோம்" என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close