Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தினமும் ஹெல்மெட் அணிந்தே வேலை செய்யும் அரசு ஊழியர்கள்! இதுதான் காரணம்

பீகார் மாநிலம், கிழக்கு சம்பரன் மாவட்டத்தில், அரெராஜில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் தினமும் ஹெல்மெட் அணிந்தே வேலை செய்து வருகின்றனர். 

பீகார், அரசு, ஊழியர்கள், ஹெல்மெட்


இந்த அரசு அலுவலகம் மிகவும் பாழடைந்துள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் அனைவரும் தினமும் ஹெல்மெட் அணிந்தே வேலை செய்து வருகின்றனர். இதுமட்டுமன்றி, இந்த அலுவலகத்துக்குள் நுழையும் முன் பொதுமக்கள்கூட தங்களுடைய தலையைப் பாதுகாத்துக்கொள்வதுக்காக ஹெல்மெட் அணிந்தே உள்ளே வருகின்றனர். இந்தப் பாழடைந்த கட்டடத்தின் கூரைகள் அரசு ஊழியர்கள் மீது சில சமயம் விழுந்ததால் ஊழியர்கள் பலர் காயமடைந்தும் உள்ளனர். 

"இது மிகவும் பழைய கட்டடம். சுவர்கள் மற்றும் கட்டடத்தின் கூரை மிகவும் சேதமடைந்துள்ளது. மழை பெய்தால் ஒழுகி, தண்ணீர் அலுவலகத்துக்கு உள்ளேயே பெருக்கெடுத்து ஓடும். எனினும் எங்களது கடமையில் இருந்து எங்களால் ஓட முடியாது. ஆகையால், நாங்கள் எல்லோரும் ஹெல்மெட்டுகளை அணிய முடிவு செய்தோம்" என்கின்றனர் பீகார் மாநில அரசு ஊழியர்கள். பீகார் அரசின் கட்டட நிர்மாணத்துறை, கடந்த ஆண்டு இந்த அலுவலகம் ஆபத்தானது என்று அறிவித்தது. ஆனாலும், இங்கு இவர்கள் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement