Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காமராஜருக்கு தனது சொந்த நிலத்தில் காட்சியகம் அமைத்த மனிதர்..!

காமராஜர் பிறந்த ஊரான விருதுநகரில், கணேசன் என்பவர் காமராஜருக்காக தனது சொந்த நிலத்தில் காட்சியகம் மற்றும் நூலகம் அமைத்துள்ளார்.

 

விருதுநகர், ஆவலப்பசாமி கோயில் தெருவில் உள்ளது காமராஜர் காட்சியகம். இதன் நிறுவனர் கணேசனிடம் பேசினோம், 'பள்ளிக்கூடம் படிக்கும் போதிலிருந்தே எனக்கு காமராஜர் ஐயாவை ரொம்பப் பிடிக்கும். கல்விக்காக அவர் செய்த நன்மைகள்தான் என்னை ரொம்பவும் கவர்ந்தது. நான் 9-ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே காமராஜரைப் பற்றிய செய்திகள் எந்தப் பத்திரிகைகளில் வெளிவந்தாலும் அப்போ, ஜெராக்ஸ் வசதி இல்லாததுனால அதைப் பார்த்து தனி நோட்டுல எழுதி வச்சிடுவேன். இப்படி அவரைப் பற்றி எழுதிய நோட்டுகளே 3 நோட்டுகள் இருக்குது. தவிர காமராஜரைப் பற்றிய புகைப்படங்கள், செய்தித்தொகுப்புகளை பேப்பர் துண்டுகளாகவும் சேகரிக்கத் தொடங்கினேன்.

சென்னையிலுள்ள கன்னிமாரா நூலகத்துக்கு கடந்த 20 வருசமா, 3 மாதத்துக்கு ஒரு முறை தொடர்ந்து போயி, சென்னையில் 4 நாள்கள் தங்கி ஆங்கில நூல்களில் உள்ள காமராஜர் பற்றிய குறிப்புகளையும் அவரைப்பற்றிய செய்திகளையும் ஜெராக்ஸ் எடுத்து வந்து அதை தமிழாக்கம் செய்து, தொகுக்க ஆரம்பிச்சு 'காமராஜர் சுருக்க வரலாறு', 'காமராஜர் புதிரா புதையலா' ஆகிய நூல்களை தொகுத்து எழுதியிருக்கேன். இப்படி சேகரிச்ச செய்திகள், புகைப்படங்களை வருங்கால மாணவர்கள் நிச்சயம் தெரிஞ்சுக்கணும்னுதான் ஆவலப்பசாமி கோவில் தெருவுல உள்ள இந்த 2.5 சென்ட் நிலத்துல இரண்டு அடுக்கில் காட்சியகத்தை கடந்த 2012-ல் திறந்தேன்.

இதுல, காமராஜர் குடும்பம், இளமைப்பருவம், காங்கிரசில் தீவிரம், அரசியலில் காமராஜர், ஆட்சியில் காமராஜர், சாதனைதிட்டங்கள். மேலாண்மைத்திறன் ஆகிய தலைப்புகளில் விளக்கத்துடன் கூடிய புகைப்படத்தைக் காட்சியகம் முழுவதும் ஒட்டி வச்சிருக்கேன். தவிர, காமராஜரைப் பற்றி மற்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள் எழுதிய 256 புத்தகங்களை நூலகத்தில் பார்வைக்காக வச்சிருக்கேன். தினமும் காலையில் 10 மணி முதல் மாலையில் 5.30 மணிவரை காட்சியகம் திறந்திருக்கும். எந்த கட்டணமும் கிடையாது. இன்னும் காமராஜர் ஐயாவைப் பற்றிய அரிய தகவல்கள், புகைப்படங்களை என் மூச்சிருக்கும் வரை சேகரிச்சுக்கிட்டேதான் இருப்பேன்’’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close