Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை பெருமாள் கோயிலில் அகோரிகள் என்று பரபரப்பு!

சென்னை தியாகராக நகரிலுள்ள பெருமாள் கோயிலுக்கு அகோரிகள் வந்ததாகத் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

 

சென்னை தியாகராய நகரில் திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டிலுள்ள பெருமாள் கோயில் உள்ளது. வழக்கமாக இந்தக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்தப் பெருமாள் கோயிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்தப் பூஜையில் அகோரிகள் பங்கேற்றதாகத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இன்று சனிக்கிழமை என்பதால், பெருமாள் கோயிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்திருந்தனர். அந்த நேரத்தில் கோயிலின் நடை பூட்டப்படிருந்தது. இதனால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், பக்தர்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கோயிலை சுத்தப்படுத்திய பிறகு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. அதன் பிறகு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையே கோயில் நடை பூட்டப்பட்டதுக்கு அகோரிகள் வருகை தந்தது தான் காரணம் என்று தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோயிலுக்கு வழக்கத்தைவிட கூடுதல் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement