வெளியிடப்பட்ட நேரம்: 13:56 (15/07/2017)

கடைசி தொடர்பு:13:56 (15/07/2017)

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஆயுதங்களைத் தயாரித்தது ஓர் இந்திய நிறுவனம்!

உலகப் புகழ் பெற்ற தொலைக்காட்சித் தொடரான 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' கதாபாத்திரங்கள் பயன்படுத்தும் வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைத் தயார் செய்தது ஓர் இந்திய நிறுவனம் என்ற ஆச்சர்யமான தகவல் வெளியாகியுள்ளது.

த்ரோன்ஸ்

டேராடூன் பகுதியில் விண்ட்லாஸ் ஸ்டீல்க்ராஃப்ட்ஸ் என்ற நிறுவனம்தான் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீரியலில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் அனைத்தையும் தயாரித்து வழங்கும் அதிகாரபூர்வ நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தச் சீரியலுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்கள் மற்றும் போர் தொடர்பான படங்கள் ஆகியவற்றுக்கும் ஆயுதங்களையும் உலோக ஆடைகளையும் தயார் செய்து வழங்கியிருக்கிறது.

இந்நிறுவனம் 1943-ல் 50 பணியாளர்களுடன் தொடங்கப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குத் தேவையான ஆயுதங்களை ஆரம்பத்தில் செய்துவந்த இந்நிறுவனம், சுதந்திரத்துக்குப் பின்னரும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஆயுதங்களைத் தயார் செய்து ஏற்றுமதி செய்துவந்திருக்கிறது. பின்னர், ஹாலிவுட் படங்களுக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் ஆடைகளைத் தயார் செய்தது. இப்போது ஆன்லைனிலும் வர்த்தகம் செய்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க