Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்கள் ரீசார்ஜ் செய்ய மொபைல் எண் தேவையில்லை! வோடஃபோன் அறிமுகம்!

வளர்ந்துவரும் மாநிலங்களில் சமீபகாலமாகத்தான், பெண்கள் அதிக அளவில் கைபேசிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். பெண்களின் மொபைல் எண்ணைத் தெரிந்துகொண்டு, அதன் மூலம் அவர்களைத் தொந்தரவு செய்வதாகத் தொடர்ந்து புகார்கள் பதிவாகின்றன.

மொபைல் பயன்படுத்தும் பெண்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளம் பெண்களின் மொபைல் போன் எண்களைப் பணத்துக்காக ரீசார்ஜ் கடையினர் விற்பனை செய்வது, அம்மாநில காவல்துறையின் விசாரணையில் அண்மையில் தெரியவந்தது. இதனைத்தடுக்கும் விதமாக, 'வோடஃபோன் சகி பேக்' என்ற புதிய வசதியை அந்நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்த பேக்கைப் பயன்படுத்தும் பெண்கள், ரீசார்ஜ் செய்யும்போது, டீலர்களிடம் தங்கள் எண்ணைத் தெரிவிக்கத் தேவையில்லை. ரீசார்ஜ் செய்யும்போது, 12604 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்கு, 'Private' என ஒரு மெஸேஜ் அனுப்பினால், மொபைல் எண்ணுக்கு ஒன்-டைம் பாஸ்வேர்டு அனுப்பப்படும். 24 மணிநேரம் வேலிடிட்டி கொண்ட இந்த பாஸ்வேர்டு மூலம், டீலரிடம் தேவையான தொகைக்கு எளிதாக ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். முதல்கட்டமாக இந்த இலவசச் சேவையை உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் வோடஃபோன் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close