Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காங்கிரஸ் எதிர்ப்பால் ரூட்டை மாற்றிய கிரண்பேடி..!

புதுச்சேரியில் நியமன எம்எல்ஏ-க்கள் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதையடுத்து ஆளுநர் கிரண்பேடி ஆய்வுக்குச் சென்ற இடத்தில் அவரது வாகனத்தை முற்றுகையிட முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது,.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல் அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையேயான அதிகார மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. கிரண்பேடி ஆட்சியைப் பற்றியும், எம்எல்ஏ-க்களைப் பற்றியும் பல்வேறு புகார்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தார். அதற்கு ஆட்சியாளர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, சட்டமன்றத்தில் ஆளுநரின் அதிகாரத்தை குறைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ”ஆளுநரை தொகுதிக்குள் நுழைய விடாதீர்கள். அவர் எங்கு சென்றாலும் மறியல் செய்யுங்கள்” என்று சட்டமன்றத்தில் பகிரங்கமாக உத்தரவிட்டார் முதலமைச்சர் நாராயணசாமி.

கிரண்பேடி வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தூய்மை இந்தியா பணியை சைக்கிளில் சென்று ஆய்வு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதன்படி சில வாரங்களுக்கு முன்பு உழவர்கரை தொகுதியில் ஆய்வு மேற்கொள்ள சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த காங்கிரஸ் எம்எல்ஏ பாலன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கிருந்து உடனே புறப்பட்டுச் சென்றுவிட்டார். அதைத்தொடர்ந்து நியமன எம்எல்ஏ-க்கள் நியமனத்திலும் கிரண்பேடிக்கு எதிர்ப்பு வலுத்தது. கிரண்பேடி உடனே வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 8-ம் தேதி கடையடைப்பு நடைபெற்ற நிலையில் தொகுதி வாரியாக காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கிரண்பேடி இன்று காலையில் தூய்மை இந்தியாப் பணியைப் பார்வையிட தர்மாபுரி என்ற பகுதிக்குச் செல்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் அவரை முற்றுகையிடவும், பிரச்னை எழுப்பத் தயாராக இருந்ததாகவும் ஆளுநர் மாளிகைக்குத் தகவல் சென்றது. உடனே உஷாரான ஆளுநர் மாளிகை, ஆய்வுப் பணியை ஊசுட்டேரி பகுதிக்கு மாற்றியது. அங்கு ஆய்வுகளை முடித்துவிட்டு வழுதாவூர் சாலையில் புதுச்சேரியை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது கிரண்பேடி அமர்ந்திருந்த வாகனத்தை முற்றுகையிட காங்கிரஸ் கட்சியினர் முயற்சி செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close