ட்விட்டரில் வைரலாகும் மலாலா - சகோதரர் உரையாடல்! | Viral in Twitter - Malala Yousafzai's Brother writes a letter to her

வெளியிடப்பட்ட நேரம்: 14:47 (15/07/2017)

கடைசி தொடர்பு:15:09 (15/07/2017)

ட்விட்டரில் வைரலாகும் மலாலா - சகோதரர் உரையாடல்!

மிகச்சிறிய வயதில் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரும், பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடி வருபவருமான மலாலா யூசுப்சாய், சமீபத்தில்தான் ட்விட்டரில் இணைந்தார். இவரைத் தற்போது சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் ட்விட்டரில் பின்தொடர்கின்றனர்.

மலாலா

சில தினங்களுக்கு முன் பிறந்தநாள் கொண்டாடிய மலாலாவுக்கு அவருடைய சகோதரர் குஷால் எழுதிய கடிதம் தற்போது வைரலாகி வருகிறது. "டியர் மலாலா, நீயோர் அற்புதமான மனிதர் மட்டுமல்ல. ஓர் அற்புதமான சகோதரியும்கூட! ஆனால் என்னைப்போல சிறப்பானவனாக மாறவேண்டுமென்றால், எனது வழிகளை நீ பின்தொடர வேண்டும். அதனால் முதலில் ட்விட்டரில் என்னைத் தொடரவும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" எனத் தனது சகோதரி ட்விட்டரில் தன்னைப் பின்தொடரவில்லை என்பதை குஷால் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இக்கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்ட மலாலா, "நான் ஃபாலோ செய்கிறேன். ஆனால் இன்று ஒருநாள் மட்டும்தான்" எனக் கண்டிப்போடு தெரிவித்ததோடு, தனது சகோதரரைத் தற்போது பின்தொடர்ந்துள்ளார். இதற்கு, "அதிக ஃபாலோயருக்காகத்தான் பொய் சொன்னேன். ஐ லவ் யூ" என நகைச்சுவையாக அவருடைய சகோதரர் பதிலளித்துள்ளார். மலாலா மற்றும் அவரின் சகோதரர் இடையே நடந்த இந்த ஜாலியான கலாட்டா ட்விட்டரில் பலரையும் கவர்ந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க