Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாஸ்மாக் கடையை அகற்ற வந்த 300 பெண்கள்! போலீஸ் தடுத்ததால் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாள்தோறும் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி பல போராட்டங்கள் நடந்து வருகிறது. திங்கள் சந்தை அருகே குருந்தன் கோடு பகுதியில் அரசு அங்கன் வாடி அருகே பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கேட்டு 300-க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் மக்கள் சாலை மறியல் செய்தனர். இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடந்த சில நாள்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்திய பின்னும், அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மதுரை  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன்பின் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த பிறகும், தொடர்ந்து அப்பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை அகற்றபடவில்லை. அதனால், பொது மக்கள் இன்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு அடைக்கப்போவதாக அறிவித்தனர். 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பேரணியாக வந்தனர். அவர்களை பாதுகாப்பு பணிக்காக அங்கிருந்த போலீஸார் தடுப்பு வேலி அமைத்து தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து குருந்தன்கோடு வெள்ளிமலை சாலையில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். டாஸ்மாக் கடையை நிரந்தரமாகப் பூட்டும் வரை போராட்டத்தைத் தொடரப்போவதாக அறிவித்து உள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement