வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (15/07/2017)

கடைசி தொடர்பு:17:35 (15/07/2017)

தானாக சார்ஜ் செய்து கொள்ளும் புதிய கார்!

அதிகமாக வெயில் அடிக்கும்போது தானாகவே சார்ஜ் செய்து கொள்ளும் புதிய கார் அறிமுகமாக உள்ளது. இந்த வகை காரில் மின்சாரம் மூலமும் சார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.

சார்ஜ்

இதுவரை பேட்டரி, டீசல் என இரண்டையும் ஒன்றாகக் கொண்டு இயங்கும் கார்கள் வடிவமைக்கப்பட்டு வந்து கொண்டுள்ளன. அவற்றுக்கு அவ்வப்போது மின்சாரம் மூலம் சார்ஜ் செய்து கொள்ள வேண்டும். சந்தையில் புதிதாக பேட்டரி கார்களின் வரவும் அதிகமாகத் துவங்கியுள்ளது. இந்நிலையில் சூரிய ஒளியினைக் கொண்டு தானாகவே சார்ஜ் செய்து கொள்ளும் வசதி கொண்ட லைட் இயர் ஒன் என்ற கார்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

லைட் இயர் என்ற நிறுவனம் இந்த வகைக் கார்களை வடிவமைத்துள்ளது. இந்தக் கார்களின் மேற்புறம் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மற்றும் பேட்டரி வழியாகத் தொடர்ச்சியாக 805 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளியில் பயணிக்கும் இந்த வகைக் கார்களில் வழக்கமாக சார்ஜ் செய்து கொள்ளும் வகையிலும் வசதியும் அமைக்கப்பட்டு இருக்கும். அடுத்த ஆண்டின் புதிய வரவாக வர இருக்கும் இந்தக் காரின் விலை 87 லட்ச ரூபாயாகும். விலை சற்று அதிகம்தான், இருந்தாலும் கார் சந்தையில் அறிமுகமாகிய பின்னரே முழு விவரங்களும் தெரிய வரும்.