வெளியிடப்பட்ட நேரம்: 18:18 (15/07/2017)

கடைசி தொடர்பு:18:51 (15/07/2017)

சென்னையில் டிராஃபிக் ராமசாமி தற்கொலை மிரட்டல்!

சமூக செயற்பாட்டாளர் டிராஃபிக் ராமசாமி சென்னையில் இருக்கும் தனது அலுவலகக் கட்டடத்தின் மேல் ஏறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக போலீஸாரை மிரட்டி வருகிறார். 

டிராபிக் ராமசாமி

'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. விவசாயிகள் நலனில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை. கதிராமங்கலத்தில் நடந்த போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 10 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்'  போன்றவற்றைக் கூறி அவர் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டிவருகிறார். தொடர்ந்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்ணாவிரதம் இருக்கும் டிராபிக் ராமசாமி

இன்று காலை முதல் அவர் கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் தற்போது தற்கொலை மிரட்டல் விடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.