Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

களைகட்டிய தேவகோட்டை மாட்டுச் சந்தை!

கால்நடைகளை விற்பதற்கென சில நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் கால்நடைச் சந்தைகளில் மாடுகளை விற்பதற்கு அனுமதியளித்தது. இதையொட்டி சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் பெரிய அளவிலான மாட்டுச் சந்தை நடைபெற்றது. இந்த சந்தைக்கு காரைக்குடி, இளையான்குடி, சிவகங்கை, மேலூர், காளையார்கோவில் போன்ற பகுதிகளில் இருந்து பல நூற்றுக்கணக்கான மாடுகள் குவிந்தன. மத்திய அரசின் உத்தரவால் களையிழந்த மாட்டுச் சந்தை இன்று ஆரவாரத்தோடு நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தின்படி  யாரும் இளம் கால்நடைகளை விற்பதற்காக சந்தைக்கு கொண்டு வரக்கூடாது. இதர கால்நடைகளை ஒருவர் சந்தைக்கு  கொண்டு வந்தால் அந்த கால்நடைக்கு சொந்தக்காரரின் பெயர், முகவரி, அடையாள ஆவணம் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். கால்நடையைப் பற்றிய அடையாளங்களை அவர் தெரிந்திருக்க வேண்டும். கால்நடைகளை இறைச்சிக்காக பயன்படுத்தக் கொண்டு வரவில்லையென்று கால்நடையின் உரிமையாளர் உறுதியளித்திருக்க வேண்டும் எனப் பல நிபந்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பல ஊர்களிலுமிருந்து வந்த வியாபாரிகள், உச்சநீதிமன்ற உத்தரவால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தனர். தடைக்குப் பின்னர் நடைபெற்ற மாட்டுச் சந்தை என்பதால் வியாபாரம் களைகட்டியது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close