Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நெல்லையில் குருதிக் கொடையாளிகளுக்கு மரியாதை!

நெல்லையில் குருதிக் கொடையாளர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 125 முறை ரத்த தானம் செய்து பிறரின் உயிரைக் காப்பாற்ற உதவிய கொடையாளிகள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். 

நெல்லையில், பொது சுகாதாரம் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பாக உலக ரத்தக் கொடையாளர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், குருதிக் கொடையாளர்கள் கலந்து கொண்டனர். 125 முறைக்கும் மேலாக ரத்த தானம் செய்த கொடையாளர்களைப் பாராட்டி பதக்கம், சான்றிதழ், கேடயங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பாராட்டினர். 

குருதிக் கொடையாளருக்கு பரிசளிக்கும் நெல்லை ஆட்சியர்

பின்னர் பேசிய அவர், ’’குருதிக் கொடையில் மிகவும் முன்னேறிய மாவட்டமாக நெல்லை இருப்பது பாராட்டுக்கு உரியது. இங்கு நிறைய குருதிக் கொடையாளர்கள் இருக்கிறார்கள். நோயாளிகளின் அத்தியாவசியத் தேவையை அறிந்து உரிய சமயத்தில் தங்களின் ரத்தத்தைக் கொடுத்து பிறரது உயிரைக் காப்பாற்றும் கொடையாளிகள் பாராட்டுக்கு உரியவர்கள். கடந்த ஆண்டில் நமது மாவட்டத்தில் 175 ரத்த தான முகாம்கள் நடந்துள்ளன. அதன் மூலமாக 17,185 யூனிட் ரத்தம் பெறப்பட்டு உரியவர்களுக்கு கிடைக்க வழி செய்யப்பட்டு உள்ளது.

பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் அல்லாமல், விபத்துக்களில் சிக்குவோருக்கும் ரத்தம் தேவைப்படுகிறது. உரிய நேரத்தில் ரத்தம் கிடைத்தால் அவர்களைக் காப்பாற்றி விட முடியும் என்கிற சூழ்நிலையில், ரத்தம் மிகவும் அவசியமானதாகும். அந்த வகையில் நமது மாவட்டத்தில் நிறைய பேர் தாங்களாகவே முன் வந்து ரத்த தானம் செய்துள்ளனர். குறிப்பாக பாலசுப்பிரமணியம் என்பவர் 125 முறைக்கும் அதிகமாக ரத்த தானம் செய்துள்ளார். 

அவரைப் போலவே பலரும் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்துள்ளார்கள். ரத்த தானம் செய்த அனைவரையும் பாராட்டுவதில் மகிழ்கிறேன். இங்கு வந்துள்ள அனைவரும் ரத்த தானம் குறித்த விழிப்பு உணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தி இதே போல இன்னும் நிறைய கொடையாளர்களை உருவாக்க வேண்டும்” என்றார் அக்கறையுடன். 

இந்த நிகழ்ச்சியில், நெல்லை மாவட்ட உதவி ஆட்சியர் இளம் பகவத், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சித்தி அத்திய முனவரா, சுகாதாரப்பணி துணை இயக்குநர் ராம்கணேஷ், மாநகர நகர்நல அலுவலர் பொற்செல்வன் எய்ட்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் அமலவாணன், தன்னார்வ ரத்தக் கொடையாளர் சங்கத் தலைவர் ரமேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement