Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.ஏ.எஸ். கனவுடன் நரிக்குறவ மாணவர்கள்! - வியப்பில் ஆழ்ந்த மாவட்ட ஆட்சியர்

நெல்லையில் உள்ள நரிக்குறவர் காலனியில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் கூட்டத்தில் பங்கேற்ற நரிக்குறவ மாணவர்கள், மாவட்ட ஆட்சியரைப் போல ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்கிற தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தினர். 

 

நெல்லை பேட்டையில் எம்.ஜி.ஆர் நகரில் நரிக்குறவர் காலனி அமைந்து உள்ளது. சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த நரிக்குரவ சமுதாயத்தினர் அங்கே வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர். ஆனாலும், அவர்கள் தொழில் நிமித்தமாக ஒரே இடத்தில் தங்காமல் இடம்பெயர்ந்து வருவதால் குழந்தைகளைப் படிக்க வைக்காமல் இருந்தனர். கடந்த சில வருடங்களாக அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியால் தற்போது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். 

 

இந்த நிலையில், தேசிய குழந்தை தொழிலாளர்; திட்டம் மற்றும் ஸ்காட் நிறுவனம் ஆகியவை இணைந்து அங்கு கல்வி வளர்ச்சி நாள், காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சியை நடத்தின. அதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார். கலைநிகழ்ச்சிகளில் நரிக்குறவ மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் சரளமாக உரையாடினார். அப்போது ஒரு மாணவன் அவரிடம், ’சார் நான் உங்களைப் போல ஆக வேண்டுமானால் என்ன படிக்கணும்’ எனக் கேட்டான்.

அவனை அருகில் அழைத்த ஆட்சியர், ’முதலில் நீ தினமும் பள்ளிக் கூடத்துக்குப் போகணும். பிறகு நல்லாப் படிக்கணும். பெரியவனாக வளர்ந்ததும் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறணும். நீ படிச்சு கலெக்டர் ஆகிவிடுவாயா?’ எனக் கேட்டார். சளைக்காமல் பதிலளித்த அவன், ’நிச்சயமா உங்கள மாதிரி வேலைக்கு போய் காரில் வருவேன் சார்..’ என்று சொன்னதும் கூடியிருந்த அதிகாரிகள் சிரித்தனர். ஆட்சியர் அவனது தோளில் கைப்போட்டு அவனது நோக்கத்தை பாராட்டினார். 

பின்னர், இந்த ஆண்டில் 5-ம் வகுப்பு முடித்து 6-ம் வகுப்புக்குச் சென்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன., பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசுகையில், ’’தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பல திட்டங்களை செயல்படுத்திய முன்னாள் முதல்வரான காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுகிறோம். இந்த நாளில், நல்ல முறையில் படித்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. 

 

சமுதாய வளர்ச்சி என்பது மக்களின் கல்வித்தரத்தை அளவுகோலாக வைத்து கணக்கிடப்படுகிறது. இங்குள்ள குழந்தைகள் படிப்பில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அவர்களின் திறமைகளைப் பார்த்து அதிசயப்பட்டேன். இந்த சுட்டிக் குழந்தைகளிடம் நிறைய திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை ஆசிரியர்கள் மெருகேற்ற வேண்டும். பெற்றோர், இந்தக் குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். 

 

இந்தக் குழந்தைகள் சிறப்பாகப் படித்து எதிர்காலத்தில், மாவட்ட ஆட்சியராகவும், மருத்துவராகவும் பொறியாளர்களாகவும் பெரிய பதவிகளுக்கு வர வைக்க வேண்டும். அவர்களை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களிடமே இருக்கிறது. இங்கு இருக்கும் ஆரம்பப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாகவும் உயர் நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறது. 

இங்குள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நல்ல கல்வியுடன் சுகாதாரமான பழக்க வழக்கங்களையும், அதன் அவசியம் குறித்தும் சொல்லித்தர வேண்டும். இப்பகுதியில் தேவையான மருத்துவ வசதி செய்து தரப்படும். பொதுமக்களும் அலுவலர்களின் அறிவுரைகளைக் கேட்டு வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இப்பகுதிக்குத் தேவையான கூடுதல் அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை உயர் கல்வி வரை அவசியம் படிக்க வைக்க வேண்டும்’’ என் விருப்பம் தெரிவித்தார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close