Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பரபரப்பான சூழலில் லாலு, நிதிஷ் தனித்தனியே ஆலோசனை


நிதிஷ் குமார், லாலு பிரசாத் பீகார் துணைமுதல்வர்  தேஜஸ்வி மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. எனவே, அவர் ராஜினாமா செய்யவேண்டும் என்று மறைமுகமாக நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், "என் மகன் ராஜினாமா செய்ய மாட்டார்" என்று லாலு திட்டவட்டமாகக் கூறி விட்டார்.
இந்த சூழலில் இன்று (16-07-1917) முதல்வர் நிதிஷ்குமார் தமது கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தைக் கூட்டி உள்ளார். இந்தக் கூட்டத்தில் தேஜஸ்வி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்தும், அவரை பதவியில் இருந்து நீக்குவது குறித்தும் விவாதிக்கப்படும் என்று சொல்கிறார்கள்.
அதே போல லாலுவும், ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை இன்று கூட்டி உள்ளார். இந்தக் கூட்டத்தில் தேஜஸ்வி மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்தும், பதவி விலகும்படி நெருக்கடி தரப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக பீகார் தகவல்கள் கூறுகின்றன.
தேஜஸ்வி ராஜினாமா செய்யமாட்டார் என்று லாலு ஏற்கெனவே கூறி இருப்பதால், நிதிஷ் குமார், லாலு இடையிலான மோதல் மேலும் அதிகரிக்கவே செய்யும் என்று கூறப்படுகிறது. ஊர் இரண்டு பட்டால், நமக்குக் கொண்டாட்டம்தான் என்ற நிலையில், பீகாரில் நடப்பதையெல்லாம் பி.ஜே.பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement