பேச்சிப்பாறை அணை திறப்பது எப்போது?

 

கன்னியாகுமரி மாவட்டம் பருவமழைகளை தொடர்ந்து பெற்று வந்தது. இதனால் மாவட்டத்தில் விவசாயமும் செழித்தது. கடந்த ஆண்டு முதல் பருவமழைகள் குமரியில் பெய்ய வில்லை. மக்களும், விவசாயிகளும் நீர் இல்லாமல் தவித்து வந்தனர். மழை பெய்யாததால் குமரியின் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை ,பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய அணைகளின் நீர்மட்டம் குறைந்தது.

கடந்த சில நாள்களாக குமரிமாவட்ட மலையோர கிராம பகுதிகளில் மழை பெய்ததைத் தொடர்ந்து அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்தது. வழக்காகமாக கன்னிப்பூ சாகுப்படிக்காக பேச்சிப்பாறை அணை ஜூன் 1ம் தேதி அரசால் திறக்கப்படும். கடந்த மாதம் அணையில் போதுமான அளவு இல்லாததால், அணை நீர் திறக்கப்பட வில்லை. இந்த நிலையில் ஜூன் மாதம் இறுதியில் பரவலாக பருவமழை பெய்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள்  கன்னிப்பூ சாகுபடியில் தீவிரம் காட்டினார்கள். ஆயிரக்காணக்கான ஏக்கர் கன்னிப்பூ சாகுபடி செய்யப்பட்டதுள்ளது. அணைகளின் நீர்மட்டம் கணிசமான அளவு இருக்கிறது. அணை திறக்கப்படாததால் கன்னிப்பூ சாகுபடி பயிர்களை காப்பாற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதற்கு ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய பேச்சிப்பாறை அணை திறக்கப்படாததே காரணம். இதுகுறித்து விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திலும் குமரிமாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.  ஆனாலும் இன்னும் பாசனத்துக்காக பேச்சிப்பாறை  அணை திறக்கப்பட வில்லை.

பேச்சிப்பாறை அணைக்கு சென்று அணைதிறக்கும் போராட்டம்  என, தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் கடந்த 12-ம் தேதி அறிவித்தது. இயக்கத்தின் தலைவர் வை.தினகரன் தலைமையில் பேச்சிப்பாறை அணை திறக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு அணையை திறக்க சென்றவர்களை போலீஸார் கைது செய்தனர். அணையை திறக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் தரப்பில் பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளோம். அவர்கள் சொன்னதும் அணை திறக்கப்படும். நீர் இருக்கும் அளவில் 7 அடி சகதி தான் இருக்கிறது என்கிறார்கள்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!