வெளியிடப்பட்ட நேரம்: 02:46 (16/07/2017)

கடைசி தொடர்பு:05:25 (16/07/2017)

மாசுபடும் கடல் அன்னை

கடலில் அலைவாய்கடல்,கரைகடல், அண்மை கடல், ஆழ்கடல் என நான்கு  பிரிவுகள் உள்ளது .கடந்த பத்து ஆண்டுகளில் கடல் தீவிரமாக மாசுப்பட்டு வருகிறது. ஆனால், இன்னும் கடலில் மாசு ஏற்படுத்தும் விளைவுகள் பற்றி எந்த ஒரு விழிப்பு உணர்வும் மக்களிடம் இல்லை. கடல், குப்பை, எண்ணெய், ரசாயனங்கள் மற்றும்  கழிவுநீரால் அதிகம் மாசுபடுகிறது. திரவங்கள், அடிக்கடி நச்சு நீரை  வெளியிடும் போது அதில் அமிலங்களின் மாசு அதிகமாக  உள்ளது. சில நேரங்களில் கப்பலில் உள்ள ரசாயனங்கள் கடலில் வீசப்படுகின்றன. சில தொழிற்சாலைகள்  கடலில் குறைந்த செறிவு உள்ள கழிவுகள் கொண்ட மெத்தில் பாதரசம் வெளியேற்றுகிறது.

 

கப்பல்கள் மற்றும் படகுகளில் இருந்து ஒழுகும் எண்ணெய் பல வழிகளில் கடலில்  நுழைகிறது.எண்ணெய் கசிவு  பவளப்பாறைகளை பலவீனப்படுத்துகிறது. கடலில் எண்ணெய் கசிவு ஏற்படுவதால் பறவைகள் நீச்சல் அடிப்பதும் சிரமம். கடலில் படர்ந்திருக்கும் எண்ணெய் கசிவு பல மாதங்கள் அல்லது பலஆண்டுகள் கூட அப்படியே இருக்கும்.கடல் பறவைகள், ஆமைகள் மற்றும் மீன்கள் கடலில் வீசப்படும் பிளாஸ்டிக்கினால் மிகுந்த  பாதிப்பு  ஏற்படுகிறது. குப்பைகளை கடற்கரையோரங்களில் போடுவதும் அல்லது கடலில் தூக்கி வீசுவதாலும் கடல் வளம் பாதிக்கப்படுகிறது.

 

கடற்கரைதான் மக்களுக்கு பெரிய பொழுது போக்கு. இந்தியா மூன்று பக்கங்களிலும் கடலால் சூழ்ந்த நாடு, மழைக்கு மிக முக்கிய காரணம் கடல்தான். அதன் சுழற்சியால் மழை கிடைக்கிறது. அதை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. கடல் பகுதியில் தொழிற்சாலை, பொது போக்கு அம்சங்கள், துறைமுகம் அமைப்பது வரை பல விஷயங்களை அக்கறை  கொண்டு செயல் பட வேண்டும். வெளிநாடுகளில் துறைமுகத்தில் நிற்கும் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவானால் அந்த கப்பலுக்கு அபராதம் விதிக்கப் படும். அந்த நாடுகள் அக்கறையோடு செயல் படுகிறது .

 

கடலோர பாதுகாப்புக்கு, ஒழுங்கு ஆற்றல் மண்டலம் சரியாக  செயல் பட வேண்டும். நமக்கு கடலையும்,கடற்கரையையும் பாதுகாக்க, சட்டமும், திட்டமும் இருக்கிறது. நிலசார்ந்த மக்களையும், கடல்சார்ந்த மக்களையும் இது உங்கள் பூமி நீங்கள்தான் காக்கவேண்டும் என்று விழிப்பு உணர்வு கொடுக்க வேண்டும். அவர்கள் ஒத்துழைத்தால் மட்டும் கடலும், மாசுபடுவதை தடுக்க முடியும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க