Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை: சிப்ஸ் கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து... 30 பேர் காயம்

சென்னை கொடுங்கையூரில் உள்ள சிப்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


 

சென்னை கொடுங்கையூர் அருகே முருகன் என்ற சிப்ஸ் கடை உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு 11.30 மணியளவில் அந்தக் கடையில் உள்ள சிலிண்டர் ஒன்று திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 7 போலீசார் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் காயமைடந்தனர். இந்த விபத்தில் தீயணைப்பு வீரர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக, 7 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே, சிலிண்டர் லீக் ஆகியதால், இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் கடை அருகே நிறுத்தப்பட்டிருந்த மூன்று இரு சக்கர வாகனங்கள் எரிந்தன. அதேபோல, அருகில் இருந்த ஏ.டி.எம் ஒன்றிலும் தீ பரவி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் அந்தப் பகுதி பதற்றமாக காணப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement