Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேட்டி கட்டினால் அனுமதி இல்லை... கொல்கத்தா மால் அட்ராசிட்டி!

வேட்டி

தேப்லினா சென் என்ற நடிகையும், அவரது நண்பரும் கொல்கத்தாவில் உள்ள  Quest Mall-க்குச் சென்றனர். அப்போது வேட்டி கட்டியிருந்த தேப்லினா சென்னின் நண்பரை மாலுக்குள் நுழையக் கூடாது என்று அங்கிருந்த பாதுகாப்பு அலுவலர்கள் அனுமதிக்க வில்லை.
வேட்டி அல்லது லுங்கி அணிந்து வருபவர்களுக்குள் மாலுக்குள் அனுமதி இல்லை என்று கூறி இருக்கின்றனர். ஏன் அனுமதி இல்லை என்று கேட்டதற்கு, பாதுகாப்புக் காரணங்களுக்காக வேட்டி கட்டியவர்கள் அனுமதிக்க முடியாது என்று சொன்னார்கள்.  வேட்டி கட்டிய அந்த நபர், ஆங்கிலத்தில் பேசியதை அடுத்து அவரை மாலுக்குள் அனுமதி அளித்தனர்.


ஆங்கிலம் பேசுபவரும், மார்டன் உடையில் வருபவர்கள் மட்டுமே மாலுக்குள் அனுமதிப்போம் என்று சொல்வது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் பண்பாட்டு அடையாளத்துக்கு எதிராக மால் ஊழியர்கள் செயல்படுகின்றனர்.
ஒரு வேளை வேட்டி கட்டிய அந்த நபர், வங்க மொழியில் பேசியிருந்தால், நிச்சயமாக மாலுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்க மாட்டார் என்று தெரிகிறது. உள்ளூர் மொழியில் பேசுபவர்களையும், வேட்டி கட்டியருப்பவர்களும் தாய் மொழி மீது பற்றுள்ளவர்கள் என்றும், அவர்களை மாலுக்குள் அனுமதித்தான் பொது அமைதி கெடும் என்றும் ஒரு தவறான முன்னுதாரணத்தை மால் நிர்வாகிகள் கொண்டுள்ளனர்.


இந்த விவகாரம் தொடர்பாக பேசிய தேப்லினா சென், "இதற்காக எங்களுக்கு மன்னிப்பு தேவையில்லை. இந்த விதிமுறைகளுக்குப் பின்னால் என்ன லாஜிக் இருக்கிறது என்பதுதான் எங்கள் கேள்வி. வேட்டி அல்லது லுங்கி அணிந்து மாலுக்கு வருவதால் அப்படி என்ன பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டு விடும் என்று தெரியவில்லை" என்று கூறி இருக்கிறார். இது குறித்து தமது முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கும் அவர், "இது போன்ற சமூக ரீதியிலான, இன ரீதியிலான விவகாரங்களை கிளப்புவது என்பது சமூகத்தில் வெறுப்புணர்வை அதிகரிக்கும்" என்று கூறி உள்ளார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close