Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’தமிழ்நாடு விற்பனைக்கு அல்ல..’: ஜல்லிக்கட்டு போராளிகளின் கருத்தரங்கம் ! 

தமிழர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆதரவாக மதுரை மாட்டுத்தாவணி எதிரே உள்ள ராமு சுப்பு அரங்கில் தைப்புரட்சி அமைப்பின் சார்பாக 'தமிழ்நாடு விற்பனைக்கு அல்ல' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கலந்துகொண்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராளிகள்- கூடங்குளம் , நெடுவாசல் உள்ளிட்ட பல போராட்டக்குழு நண்பர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் . இதில் தமிழர்களின் பாரம்பரிய பறை இசை, சிலம்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு பின் கருத்தரங்கம் தொடங்கியது.

madurai

தைப்புரட்சி போராட்டக்குழு தோழர் கவிதா அவர்கள் பேசுகையில் " ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றதற்கு முதல் காரணம் ஒற்றுமை. வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் போராடியது தான் வெற்றிக்கு முழு காரணம். இந்த யுக்தியை நெடுவாசல் போராட்டத்திற்கும் களம் கண்டு போராடினால் வெற்றி தமிழனுக்கு தான்’ என்று பேசினார்.

கலாச்சாரம் தான் நமது கருவி என்ற தலைப்பில் கவிஞர் லிபி ஆரண்யா பேசுகையில் ' ஜல்லிக்கட்டு போராட்டம் உடலை வருத்தி போராடப்படாமல் ஒரு கொண்டாட்டமான போராட்டமாக அமைந்தது. அதனால் தான் அப்போராட்டத்தைக் கண்டு இந்தியாவே திரும்பிப்பார்த்தது . கலாச்சாரம் என்ற நமது ஆயுதம் தான் அனைவரையும் எழுச்சி பெற செய்தது. கலாச்சார கலை தான் ஒவ்வொரு இளைஞனையும் சோர்வடையாமல் போராடத் தூண்டியது’ எனப் பேசினார் .

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close