Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் கைது..!

பிரதமர் இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக விவசாயிகளை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். 

கோப்புப்படம்


விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்தப் போராட்டம் சுமார் 40 நாள்கள் நீடித்தது. பின்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்த நிலையில் இன்று மீண்டும் தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட  முயற்சிசெய்தனர். பிரதமர் இல்லம் முன்பு அரை நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட முன்ற தமிழக விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் பிரதமர் இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கையும் செய்தனர். நாளை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அந்தப் பகுதியைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement