Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோவில்பட்டியில் 10 நாளாக நடந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 10 நாள்களாக நடந்து வந்த விவசாயிகளின் காத்திருக்கும் போராட்டம் ஆட்சியரின் அறிவிப்பால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

kovilpatti

’கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகள் பயிர் காப்பீட்டு பிரீமியம் செலுத்திய விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். விவசாயிகளின் விவசாயக் கடன்களை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதை வாபஸ் பெற்று அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை. அரசு உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு தங்கள் கோரிக்கைகளை முழுமையாக அரசு ஏற்கும் வரையில் போராட்டம் தொடரும் என அறிவித்து, பிச்சை எடுத்தல், மண்டி இடுதல், கண்ணைக்கட்டுதல், தூக்கிடுதல் , ஒப்பாரி ஆகிய போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த விவசாயிகள் ஆட்சியரின் பேச்சுவார்த்தை மற்றும் அறிவிப்பால் தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

இந்திய உழவர் உளைப்பாளர் கட்சியின் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் நாராயணமி ஆட்சியருடனான பேச்சுவார்த்தைக்குப் பின் பேசுகையில், ‘’கடந்த 2015 – 2016ம் ஆண்டு பயிர் காப்பீட்டு பிரீமியம் செலுத்தியவர்களுக்கு இந்த மாதம் இறுதிக்குள் பயிர்காப்பீட்டுத் தொகை வழங்கவும், 2016 -2017ம் ஆண்டு பயிர் காப்பீட்டு பிரீமியம் செலுத்தியவர்களுக்கு மகசூல் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை கணக்கிடும் பணி நடந்து வருகிறது, ஆகவே விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் அவர்கள் கூறியதையடுத்து காத்திருக்கும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம். பயிர்காப்பீட்டுத் தொகை வழங்குவதில் முறைகேடு ஏதும் நடந்தால், மத்திய, மாநில அரசுப் பிரதிதிகளின் வீட்டின் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்’’ எனக் கூறினார்.

விவசாயிகளின் தொடர் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டதால் விவசாயிகள் கலைந்து சென்றனர்.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close