கடவுளை தரிசிக்க கட்டணம் வேண்டுமா..?- திருப்பூரில் இந்து அமைப்பு ஆர்ப்பாட்டம்

திருக்கோயில்களில் உள்ள பல்வேறு நடைமுறைப் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை இந்து முன்னணி அமைப்பினர் நடத்தினர்.

இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இந்து முன்னணியினர், திருக்கோயில்களின் வருமானத்தை கோயில்களுக்குத்தான் செலவிட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அரசு அமல்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்துகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அப்படி  ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள கோயில்களின் சொத்துகள் அனைத்தையும் அரசு நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும். கோயில் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால் இந்து அறநிலையத் துறையே ஊழலில் திளைத்துக் கிடக்கிறது. கடவுளை காட்சிப் பொருளாக்கி பணம் பார்க்கும் வேலையை அரசாங்கம் செய்து வருகிறது. எனவே அவர்களிடம் இருந்து கோயில்களை மீட்டெடுக்க வேண்டும். கடவுளை தரிசிப்பதற்கு கட்டணம் ஏன் கட்ட வேண்டும். அனைத்து கோயில்களிலும் உள்ள கட்டண தரிசன முறையை அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!