அன்புச் சகோதரர் ஸ்டாலினுக்கு நன்றி: கமல் | Kamal thanks Stalin in his twitter page

வெளியிடப்பட்ட நேரம்: 20:56 (16/07/2017)

கடைசி தொடர்பு:20:56 (16/07/2017)

அன்புச் சகோதரர் ஸ்டாலினுக்கு நன்றி: கமல்

பிக் பாஸ் தொடர்பாக இந்த வாரம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் கமல்ஹாசன் தமிழக் அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் கரை படிந்துள்ளது என கருத்து தெரிவித்து இருந்தார். அதற்கு, தமிழக அமைச்சர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கமலுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். 

கமல்

அதில், " ஆட்சியின் அவலட்சணத்தை வெளிப்படுத்தும் உரிமை கமல் உள்பட வாக்களித்த அனைவருக்கும் உண்டு. விமர்சனங்களில் உள்ள உண்மையை புரிந்து கொண்டு விளக்கம் அளிப்பது தான் ஜனநாயகத்தின் அழகு. ஆனால், கமல் மீது பாய்ந்து பிறாண்டும் வகையில் தமிழக அமைச்சர்கள் செயல்படுகின்றனர். தமிழக அரசு குறித்த கமல்ஹாசனின் கருத்து மக்களின் குரலாகும். ஊழல் அரசு என்று பொதுமக்கள் சொல்லி வருவதை நடிகர் கமல் வெளிப்படுத்தியுள்ளார். கமல் மீது வன்மம் கொண்டு கருத்து தெரிவிப்பதும் அவரை மிரட்டுவதும் ஜனநாயகத்தை பறிக்கும் செயல்' என்று அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு, தன் ட்விட்டர் பக்கத்தில் , கமல் நன்றி தெரிவித்து இருக்கிறார் . " அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு, நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. என் ஆதங்கங்களில் பல உங்கள் கோபச் செய்தியிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே. ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது. " என்றார். 

 

 

 

 


[X] Close

[X] Close