Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கச்சிமடத்தில் தூய சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

ராமேஸ்வரம் தீவு மக்களின் பாதுகாவலராகத் திகழும் தங்கச்சிமடம் வேர்க்காடு தூய சந்தியாகப்பர் ஆலயத்தின் 475-ம் ஆண்டு திருவிழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 மத நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாக விளங்கும் தூய சந்தியாகப்பர் ஆலத்தின் திருவிழாவில், சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து அனைத்து சமுதாய மக்களும் மீனவர்களும் பங்கேற்பர். இன்று நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியில், மும்மதங்களையும் சேர்ந்த கோவிந்தராஜ், ஜமாத் தலைவர் பஷீர், கிராமத் தலைவர் அந்தோணிராஜ் முன்னிலையில், மதுரை மறைப்பணி இயக்குநர் ஆனந்த் திருவிழாக் கொடியை ஏற்றினார். இதைத் தொடர்ந்து நடந்த நவநாள் திருப்பலியில், பங்குத் தந்தையர் ராஜ ஜெகன், அந்தோணிசாமி, ஜூலியன், இனிக்கோ மற்றும் இறை மக்கள் பங்கேற்றனர்.

திருவிழாவின் நிறைவு நாளான ஜூலை 24 அன்று இரவு, சந்தியாகப்பர் தேர் பவனியும் அதைத் தொடர்ந்து திருவிழா சிறப்பு திருப்பலியும் நடக்க உள்ளது. மறுநாள், திருவிழா நிறைவு திருப்பலியுடன் கொடி இறக்கமும் நடைபெறும். இடைப்பட்ட நாள்களில், நவநாள் திருப்பலியும் நடைபெறும். 

10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close