Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொறியியல் மாணவர் சேர்க்கை கவுன்சலிங் இன்று தொடக்கம்

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக் கலந்தாய்வு அட்டவணையை உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கடந்த 13-ம் தேதி வெளியிட்டார். அதன்படி தொழில் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான கலந்தாய்வு, ஜூலை 17 மற்றும் 18-ம் தேதி நடக்கிறது.  19-ந் தேதி மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு நடைபெறும். அண்ணா பல்கலைக்கழகத்தில் 19 மற்றும் 20-ம் தேதிகளில் விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணி நடைபெறும். அதில் கலந்துகொள்ளாதவர்கள், 21-ம் தேதி நடைபெறும் விளையாட்டுப் பிரிவுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியாது.

அண்ணா பல்கலைக்கழகம்

 ஜூலை 23-ம் தேதி முதல் பொதுப் பிரிவிற்கான கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் எடுத்திருக்கும் கட்-ஆஃப் மதிப்பெண்ணைக் குறிப்பிட்டு, அவர்கள் கலந்தாய்வில் பங்குபெறும் தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டுள்ளனர். கலந்தாய்வுக்கான அட்டவணையை www.tnea.ac.in என்ற இணைய தளத்தில் மாணவ, மாணவிகள் தெரிந்துகொள்ளலாம். அழைப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு இரண்டு மணி நேரம் முன்பாக கலந்தாய்வு அரங்கிற்கு வர வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement