Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கருணாநிதி ஓட்டு போட  கோட்டைக்கு வருவாரா..?

தி.மு.க. தலைவர் கருணாநிதி, உடல் நலம் குன்றி பல மாதங்களாக கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியஸ்தர்களைத் தவிர வேறு யாரையும் கருணாநிதியைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. கருணாநிதியின் பிறந்த நாள், அரசியல் வைரவிழா சமயத்தில், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கோபாலபுரம் வீட்டுக்கு வந்து கருணாநிதியைப் பார்த்துவிட்டுச் சென்றனர். அதன் பின்னர், ஜனாதிபதித் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மீரா குமார், சென்னை வந்து ஆதரவு திரட்டியபோது, கோபாலபுரம் இல்லம் வந்து கருணாநிதியிடம் ஆசிபெற்றார். அப்போது எடுக்கப்பட்ட படங்களும் வெளியிடப்பட்டன. இன்று, ஜனாதிபதித் தேர்தல் நாடு முழுவதும் நடைபெறுகிறது. 

கருணாநிதியைச் சந்திக்கும் மீரா குமார்

கருணாநிதி, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் அவருக்கு ஓட்டு இருக்கிறது. ஆனால், உடல்நலம் குன்றியநிலையில் அவர், கோட்டைக்கு வந்து ஓட்டு போடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க. சார்பில் மொத்தம் 89 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஓட்டு போட, கோட்டையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement