Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பா.ம.க-வை காப்பியடிக்கும் தி.மு.க; சொல்கிறார் அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. 29-வது ஆண்டு விழா வேலுரில் நடந்தது. அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில், அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அப்போது, ''தமிழத்தில் தி.மு.க., அ.தி.மு.க-வை எதிர்க்கும் ஒரே கட்சி பா.ம.க. மட்டும்தான். இந்த இரண்டு கட்சிகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும். பூரண மதுவிலக்கு, ஏரி குளங்கள் தூர் வாறுதல் எல்லாம் பா.ம.க-வின் கொள்கைகள். அதைத்தான் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் காப்பி அடித்துக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, தி.மு.க. நம்மை அப்படியே பின்பற்றுகிறார்கள். அய்யா ராமதாஸ் அறிக்கை எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவரது அறிக்கையைக் காப்பியடித்து வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.

பொதுக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ்

மேலும், ''அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் போட்டி என்று கிளப்பிவிட்டார்கள். இப்போது ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இடையே போட்டி என்று அவர்களாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க-வுக்கு அ.தி.மு.க-வும் போட்டி போட்டு தமிழ்நாட்டுக்கு என்ன நன்மை? பா.ம.க. ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டுக்கும் ஆந்திராவுக்கும் போட்டி வரும். தமிழ்நாட்டுக்கும் சிங்கப்பூருக்கும் போட்டி வரும். அதை எங்களால் கொண்டு வர முடியும். தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் வசனம் பேசுவதே வேலையாக இருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்த இரண்டு கட்சிகளையும் ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கும் போதுதான், தமிழ்நாட்டுக்கு விடுதலை. அந்த நாள் வெகுவிரைவில் வரும்'' என்று பேசினார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement