Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபேக் அக்கவுன்ட்டை தடுக்க பாகிஸ்தான் அரசு தந்த ஐடியா... நிராகரித்த ஃபேஸ்புக்!

ஃபேஸ்புக்

'அனைத்து ஃபேஸ்புக் கணக்குகளையும் அந்தந்தப் பயனரின் மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும்' என்ற பாகிஸ்தான் அரசின் கோரிக்கையை நிராகரித்திருக்கிறது, ஃபேஸ்புக்.

பாகிஸ்தான் நாட்டில், 3 கோடிக்கும் அதிகமானோர் ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார்கள். இதில், கணிசமான அளவில் ஃபேக் அக்கவுன்ட்ஸ் இருப்பதாக, பாகிஸ்தான் அரசு கருதுகிறது. அதன்மூலம் தேவையற்ற தகவல்களும் பதற்றத்தை உருவாக்கும் விஷயங்களும் பகிரப்படுவதாகச் சொல்கிறது பாகிஸ்தான் அரசு. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு ஃபேஸ்புக் அக்கவுன்ட்டையும் மொபைல் எண்ணுடன் இணைக்குமாறு, ஃபேஸ்புக்கை பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. வாட்ஸ்அப் போன்ற அப்ளிகேஷன்கள், மொபைல் எண் தந்தால்தான் செயல்படவே ஆரம்பிக்கிறது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறது பாகிஸ்தான் அரசு. ஆனால், டெக்னிக்கலாக அது சாத்தியமில்லை. மின்னஞ்சல்தான் எங்களுக்கு வசதி என ஃபேஸ்புக் விளக்கம் அளித்திருக்கிறது.

அதே சமயம், பாகிஸ்தான் அரசின் கோரிக்கையை ஏற்று ஃபேஸ்புக்கில் இருக்கும் சர்ச்சைக்குரிய விஷயங்களை நீக்க நடவடிக்கை எடுப்பதாக ஃபேஸ்புக் உறுதி அளித்திருக்கிறது. நிறைய ஃபேஸ்புக் பயனர்கள் மீது பாகிஸ்தான் அரசு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறது. அதையும் கவனத்தில்கொள்வோம் என அறிவித்திருக்கிறது ஃபேஸ்புக்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement