Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, 23 சதவிகிதம் உயர்ந்த டிஜிட்டல் பரிவர்த்தனை!

ணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, நாடு முழுக்க டிஜிட்டல் பரிவர்த்தனை 23 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனை

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி இரவு முக்கிய அறிவிப்பாக, இனி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவித்த பிரதமர், இனி டிஜிட்டல் பரிவர்த்தனையை அனைவரும் கடைப்பிடிக்கவும் வேண்டுகோள் விடுத்தார். மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனையை எளிமையாக்கவும் ஊக்குவிக்கவும் பல நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டது. அதில் 'டிஜிட்டல் லக்கி கிராகக் யோஜனா' மற்றும் 'டிஜிதன் வியாபார் யோஜனா' ஆகிய திட்டங்கள் நல்ல பலனைக் கொடுத்தன.

இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, பொதுமக்கள் பலரும் தங்களின் பல தேவைகளுக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையைக் கடைப்பிடிக்கத் துவங்கினர். அதன் பலனாகக் கடந்த எட்டு மாதங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை 23 சதவிகிதமாக உயர்ந்துள்ளதுடன், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் 7 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறும் மக்களின் எண்ணிக்கை வரும்காலங்களில் இன்னும் கணிசமாக உயரும் எனக் கருதப்படுகிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close