Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜனாதிபதி தேர்தலில் கருணாநிதி வாக்களிப்பாரா? துரைமுருகன் அதிரடி பதில்

ஜனாதிபதி தேர்தலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி வாக்களிப்பாரா என்ற கேள்விக்கு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், அதிரடியாகப் பதில் அளித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்களாக ஆளும் கட்சி சார்பில் ராம்நாத் கோவிந்த்தும் எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், இன்று நாடு முழுவதும் காலை 10 மணிக்குத் தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், முதல் வாக்கை முதல்வர் பழனிசாமி பதிவுசெய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனாதிபதி தேர்தலில் முதல் வாக்கை அளித்துள்ளேன். யாருக்கு வாக்களித்தோம் என்றோ; யாருக்கு வெற்றி என்றோ சொல்லக் கூடாது. ஏற்கெனவே முடிவெடித்தபடி அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் வாக்களிப்பார்கள்" என்றார்.

இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் மற்றும் புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாக்களித்தனர். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், 'ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் நன்றாக இருந்தன. எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீரா குமார் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது' என்றார். பின்னர், தி.மு.க. தலைவர் கருணாநிதி வாக்களிப்பாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த துரைமுருகன், 'பொறுத்திருந்து பாருங்கள்' என்று அதிரடியாகக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற்று ஜனாதிபதியாகப் பொறுப்பேற்பார் என்றார்.

கருணாநிதி வாக்களிக்க மாட்டார்

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம், ஜனாதிபதி தேர்தலில் கருணாநிதி வாக்களிப்பாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று கருணாநிதி வாக்களிக்க மாட்டார் என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement